முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மகளிர் தினம் அனுஷ்டிப்பு!

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மார்ச் 08ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் சர்வதேச மகளிர் இன்று(08) காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் எளிமையான முறையில் இடம்பெற்றது.

இதன்போது மகளிர் அமைப்புக்களினுடைய உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனையினை ஊக்குவிக்கம் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனை மற்றும் கண்காட்சி கூடத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும் பெண்தொழில் முயற்சியாளர் சார்ந்தொருவரும் இணைந்து நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.
அதிதிகளால் கலந்து கொண்ட முயற்சியாளர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும், மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் பெண்தொழில் முயற்சியாளரை ஆவணப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.

“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி அனுசiனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.