வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியா த தே கூ தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பதவி விலகினார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் பதவி விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு ஆட்சி செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திடம் கையளிக்கப்பட்டு பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதசே சபையின் தவிசாளர் பதவியிலும் மாற்றம் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.