எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் அமைக்கப்பட்ட எல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டம் இன்று திறப்பு.

நாட்டின் நிர்மாணத்துறையின் புதிய அனுபவத்துடன், புதிய படைப்பாக நிர்மாணிக்கப்பட்ட கொம்பெனித்தெருவில் உள்ள எல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் இந்த திட்டம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன

Leave A Reply

Your email address will not be published.