ஜெனீவா வாக்குள் மூன்றா பிரிக்கிறது – இலங்கைக்கு எதிராக 20 வாக்குகள் | ஆதரவாக 10 வாக்குகள்

இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் ஆணையத்தின் உறுப்பு நாடுகளிடையே வலுவான பிளவு ஏற்பட்டு உள்ளது என தூதரக வட்டாரங்கள் வழி தெரிய வருகிறது.

அதன்படி, அதன் 47 உறுப்பு நாடுகள் தற்போது மூன்றாக பிரிவுற்று இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக இலங்கைக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திய பல நாடுகள் மேற்கத்திய நாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கைக்கு எதிரான தீர்மானம் 46 க்கு ஆதரவாக 20 உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களிக்கும் நிலையே காணக் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 17 நாடுகளும் நடுநிலையாக இருக்க முடிவு செய்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர், இது இலங்கைக்கு பின்னடைவானதொரு நிலைக்கு காரணமாகலாம் எனக் கருதப்படுகிறது.

இருப்பினும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் பெரும்பான்மையானவை தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதே இலங்கைக்கான சாதகம் எனலாம்.

நடுநிலை வகிக்க போகும் 17 நாடுகள் மற்றும் இலங்கைக்கு ஆதரவான 10 நாடுகளும் உள்ள நிலையில் மொத்தம் 27 நாடுகள் இருப்பதால் ஏற்படும் மொத்த நாடுகளின் பெரும்பான்மையைக் கொண்டிருப்பது இலங்கைக்கு நன்மையாக உள்ளது.

ஆனால் இங்கு சிறப்பு என்னவென்றால், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நமது மூன்று அண்டை நாடுகளான ஜெனீவா தீர்மானத்தில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியவை நடுநிலை நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

இலங்கையின் நட்பு நாடுகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமை எழுந்துள்ளது னத் தரியவருகிறது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தின் வல்லுநர்கள் கூறுகையில், இந்த ஆணையம் முன்னர் சிரியா, மியான்மர் மற்றும் வட கொரியாவுக்கு எதிராக மட்டுமே இத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

எவ்வாறாயினும், இலங்கை மற்றும் பிற நட்பு நாடுகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஆணையத்திற்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் பல உட்பிரிவுகளை மனித உரிமைகள் ஆணையருக்கு திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆதாரம் – தேசய பார்வை

Leave A Reply

Your email address will not be published.