நான் அங்கொன்றும் இங்கொன்றும் வெவ்வேறு கதைகளை பேசுபவனல்ல : சஜித் (வீடியோ)

பிரதமர் மகிந்த அவர்கள் நான் நாட்டை துண்டாட வடக்கு – கிழக்கில் போய் பேசுவதாக பேசியுள்ளார். நான் அங்கொன்றும் இங்கொன்றும் பேசுபவனல்ல. நான் 13 + என வெளிநாடுகளிலும் 13 – என உள் நாட்டிலும் பேசுபவனல்ல.

நான் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக கடைப் பிடிப்பேன். அதை இன்னும் பலமுள்ளதாக்குவேன். கிராம இராச்சியம் மற்றும் நகர இராச்சியங்களை உருவாக்கி ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகமான அதிகார பகிர்வுகளை வழங்குவேன். அதோடு வீழ்ந்து போயுள்ள மக்களுக்காக 20 ஆயிரம் மாதாந்தம் குடும்பங்களுக்கு கொடுப்பேன். எண்ணை விலையை ஆட்சிக்கு வந்ததும் குறைப்பேன் என வெலிவிட்ட அரசியல் கூட்டத்தில் வைத்து இன்று (5) சஜித் பிரேமதாச பிரதமரது கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் இந்த அரசு வேலை செய்ய முடியாத ஒரு அரசு. நாம் வேலை செய்யும் ஒரு அரசாக ஆட்சி பீடம் ஏறுவோம் என்றார்.

Comments are closed.