ஜே.வி.பியினருடன் கூட்டணி அமைப்பாரா கரு ஜயசூரிய?

கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கமும், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியும் இணைந்து பயணிப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் பாரியதொரு கூட்டணியை ஜே.வி.பி. ஏற்கனவே கட்டியெழுப்பியுள்ளது. பல இடதுசாரி கட்சிகளின் பிரமுகர்களில் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு வேலைத்திட்டங்களை ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வருகின்றது. குறித்த ஜனநாயக சமரில் கரு ஜயசூரியவையும் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்றிருந்தாலும் அது இன்னும் வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

எனினும், நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் நடைபெறும் போராட்டங்களுக்கு கரு ஜயசூரிய ஒத்துழைப்பு வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.