தனுஷ், விஜய் சேதுபதி, இமான் ஆகிய மூவருக்கும் தேசியவிருது அறிவிப்பு.

2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த தமிழ் படமாக அசுரன் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக தனுஷ், துணை நடிகராக விஜய் சேதுபதி, சிறந்த இசையமைப்பாளராக விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமான் தேர்வாகி உள்ளனர். ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது தமிழில் கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு கிடைத்துள்ளது.

இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்னையால் 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்தாண்டு அறிவிக்கப்படவில்லை. தற்போது 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று(மார்ச் 22) அறிவித்துள்ளது. அதன்படி 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சிறந்த நடிகர் இரண்டு பேர்
இந்தாண்டு சிறந்த நடிகர்களாக இரண்டு பேர் தேர்வாகி உள்ளனர். ஒருவர் அசுரன் படத்தில் நடித்த தனுஷ். மற்றொருவர் ஹிந்தியில் போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய். இவர் தமிழில் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார்.
Star Lanka தரம் ; அது என்றும் நிரந்தரம்.

தேசிய திரைப்பட விருதுகள் விபரம்….

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர் – மனோஜ் பாஜ்பாய்(போன்ஸ்லே, ஹிந்தி)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குனர் – சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் – ஹிந்தி)

சிறந்த படம் – மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – விக்ரம் மோர்(கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் – ராஜு சுந்தரம் (மகாராசி – படம் : தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (படம் : விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், ஹிந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாகா விஷால் (படம் : கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தா – விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி

சிறந்த ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன் (படம் : ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த அறிமுக இயக்குனர் – மதுக்குட்டி சேவியர் (படம் : ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் – கஸ்தூரி(ஹிந்தி)

சிறந்த படத்தொகுப்பு – நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த பாடகர் – பி.பராக்(கேசரி, ஹிந்தி)

சிறந்த பாடகி – சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

ஒத்த செருப்புக்கு இரண்டு தேசிய விருது

பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி, நடித்து, தயாரித்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்காக சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.