ஓமனில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் 7 பேர்.

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 728 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 342 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 93 சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 104 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.