யாழில் 79 பேர் உட்பட வடக்கில் இன்று 80 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தொற்றாளர்களில் 66 பேர் யாழ். மாநகர மத்தி நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 677 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே, 80 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 77 பேருக்குக் கொரோனா த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்களில் 11 பேர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

யாழ்ப்பாணம் மாநகரில் நவீன சந்தை உள்ளிட்ட கடைத் தொகுதிகளில் பணியாற்றும் 66 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.