போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பொலிஸார் சிலர் இன்னும் வௌியில்

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை மீண்டும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் நான்கு பொலிஸார் தொடர்ந்து பொலிஸ் சேவையில் இருப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவத்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இந்த வியாபாரம் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, சட்டமா அதிபர் இந்த கருத்தை வெளியிட்ட குறித்த உயர்மட்ட சந்திப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் விரட்டப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் குறித்த ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் பொலிஸார் குறித்த ஊடகவியலாளர்களை விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments are closed.