இயக்கச்சி வெடிப்புச் சம்பவம், மேலும் ஒருவர் கைது

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவு, இயக்கச்சி பகுதியில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் கமலகரன் (வயது-40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே நேற்று (06) இரவு படையினரால் கைது செய்யப்பட்டு இன்று (07) பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் (ரிஐடி) கையளிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த சம்பவத்தில் காயமடைந்தவரும், ஆசிரியை ஒருவரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.