பொலிஸ் மிருகத்தனத்தை மன்னிக்கப் போவதில்லை! கம்மன்பில தெரிவிப்பு.

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தான் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உலகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெரும் நிலையில் அரசைக் குறை கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு பொலிஸ் அதிகாரியால் ஒரு கறுப்பினத்தவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது அமெரிக்க அரசை எவரும் குறை கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் பயணப் பொதிக்குள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் அரசு இதனையே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.