ஈஸ்டர் தினத்தையொட்டி தேவாலயங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பணிப்புரை.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 263 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், ஒவ்வொரு தேவாலயத்துக்கும் பொறுப்பான மதகுருவுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தின வணக்க வழிபாடுகளைத் தடைகள் இன்றி நிறைவேற்ற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.