ஆயர் இரா­யப்பு ஜோசப்பின் மறைவு தமிழருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு : சம்பந்தன்

அருட்திரு ஆயர் இரா­யப்பு ஜோசப்பின் மறைவு
தமிழருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

இரங்கல் செய்தியில் சம்பந்தன் தெரிவிப்பு

“மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் அருட்திரு ஆயர் இரா­யப்பு ஜோசப்பின் மறைவானது தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஆயர் இராயப்பு ஜோசப், தமிழ் மக்களின் உரிமைக் குரலாகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்தவர்.

மக்களோடு மிகவும் நெருங்கிப் பழகிய ஆயர், தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்துக் கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களுக்காக முன்னின்று போராடிய ஒருவராவார்.

இன, மத மொழிகளுக்கு அப்பால் சாதாரண மக்களின் உரிமைகளுக்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம்.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப்பின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என நாம் இறைவனைப் பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள், திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அன்னாரது ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்போமாக!” – என்றுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.