திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பொதுமக்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பொதுமக்கள் வழிமறித்து ஆர்ப்பாட்டம் விபத்தில் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட அநிதிற்கு நீதி கேட்டு போராட்டம்!

நேற்று முன்தினம் திருகோணமலை சர்தாபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வீதியோரம் நிறுத்திருந்த மோட்டார் வண்டி அருகேயிருந்த மூன்று பிள்ளையின் தந்தையான கூலித்தொழிலாளி அந்தோனி என்பவர் வேகமாக கார் ஓட்டிவந்தவர் அடித்து தள்ளியதால் உயிரிழந்ததை தொடர்ந்து சீனன்குடா பொலிஸார் பணவசதியுடைய கார் ஓட்டி வந்தவருக்கு சார்ப்பாக நடப்பதாகவும் கார் ஓட்டி வந்தவரை உடனடியாக விடுவித்தமை உயிரிழந்தவரை மதுபாவனை பாவித்தது போன்று குற்றத்தை மறைக்க முயற்சி செய்வதாகவும் பாரபட்சமாக நடப்பதாக கூறி இன்று காலை 9மணியிலிருந்து தற்போதுவரை பொதுமக்கள் பிரதான வீதியை மறித்து சடலத்தை அடக்கம் செய்யாமல் பிரேத பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது.

இதன் காரணமாக திருகோணமலை-கண்டி பிரதான வீதி கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.