துக்க நாள் அனுஷ்டித்து ஆயரை அஞ்சலியுங்கள் – சுரேஷ் வேண்டுகோள்.

“வடக்கு, கிழக்கு தமிழர்களுக்காக உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் அயராது குரல் கொடுத்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு எமது இனத்துக்கு ஏற்க முடியாத இழப்பாகும். இன்றிலிருந்து ஆண்டகையின் திருவுடல் அடக்கம் செய்யப்படும் நாள் (திங்கள்) வரை வடக்கு, கிழக்கில் துக்க நாட்கள் அனுஷ்டிக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“இராயப்பு யோசப் ஆண்டகையின் இறுதித் திருப்பலி இடம்பெறும் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்புக் கொடிகளோடு அவருடைய உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.