காணி கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சுமந்திரன் தலைமையில் இலவச சட்ட ஆலோசனை!

வடக்கில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணியில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்ட பத்து வரையான சட்டத்தரணிகள் கலந்துகொண்டு மக்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.