யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

50 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

தெல்லிப்பழை, கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இன்று கைதுசெய்யப்பட்டார் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேநபரிடம் கைப்பற்றப்பட்டது. அவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.