வீடொன்றின் சுவாமி அறையில் புதையல் தேடி அகழ்வு நடந்ததா? யாழ். பொலிஸார் விசாரணை.

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் வீடொன்றின் சுவாமி அறையில் புதையல் உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணி இடம்பெற்றதா? என்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வீட்டில் இராணுவத்தினர் எனக் கூறிய சிலர் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதாக நேற்று நண்பகல் பொலிஸ் அவசரப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எனினும், அங்கு அகழ்வுப் பணியை முன்னெடுத்தோர் பொலிஸாரின் வருகை அறிந்து தப்பிச் சென்றினர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு மாறுபட்ட தகவல்களை வழங்கியுள்ளார். அவர் தான்தான் சுவாமி அறையின் நிலத்தைக் கொத்தியதாகவும் கூறியுள்ளார்.

அதையடுத்து சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.