15 வயது மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய மாணவன் கைது.

ஹட்டனில் பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்விப் பயிலும் 15 வயது மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் அதே பாடசாலையின் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவன் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவியை துஸ்பிரயோகப்படுத்தியதான தெரிவிக்கப்படும் மாணவன் குறித்த மாணவியின் காதலன் எனவும் தெரியவந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்த மாணவி கடந்த 26 ஆம் திகதி பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் 29 ஆம் திகதி குழந்தையை பிரசவித்துள்ளார்.

குறித்த மாணவன் கொட்டகலை பிரதேசத்தை சேர்தவன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாணவியின் நண்பர்கள் மற்றும் பெற்றோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலே மாணவி கருதரித்து குழந்தையை பிரசவித்துள்ள விடயம் தெரியவந்தாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளையை பிரசவித்த மாணவியும், பிள்ளையும் டிக்கோயா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.