பொது இடங்களில் குப்பை கொட்டினால், வெற்றிலை துப்பினால் தண்டப்பணம் அறவிட உத்தரவு.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட
யாழ் மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

யாழ் மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பது, தண்டப் பணத்தை பெறுவதற்காக குறித்த மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர காவல் படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டு நிலையில் விபத்துக்களைத் தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர காவல் படை கண்காணித்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஐயாயிரம் ரூபா (5000) வெற்றிலை துப்பினால் இரண்டாயிரம் ரூபா (2000) தண்டப்பணமாக அளவிட மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் அறிவிப்பு.

இன்று முதல் மாநகர காவல் படை மூலமாக பணிகள் ஆரம்பம்.

Leave A Reply

Your email address will not be published.