நாடுபூராகவும் கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களை நிறுவும் செயற்றிட்டம்.

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருக்கு அமைவாக நாடுபூராகவும் 250 கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களை நிறுவும் செயற்றிட்டத்தின் ஒரு அம்சமாக 06.04.2021 ம் திகதி கல்முனை கூட்டுறவு வலயத்துக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தின் அக்கரைப்பற்று தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி க.உதயராஜா அவர்களின் ஆலோசனைக்கமைவாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் க.காந்தரூபன் வழிகாட்டலுடன் சங்கத்தின் பொதுமுகாமையாளர் இ.மகேஸ்வரன் நெறிப்படுத்தலில் சங்கத்தின் தலைவர் எஸ்.விஜயகுமார் அவர்களினால் கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் உபதலைவர்,இயக்குனர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.