மோட்டர் சைக்கிளில் மதுபான கடத்தி வந்த மதுபான வியாபாரி கைது.

அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவிலிற்கு மோட்டர் சைக்கிளில் மதுபான கடத்தி வந்த மதுபான வியாபாரி ஒருவரை செவ்வாய்க்கிழமை தம்பிலுவில் பிரதான வீதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் 75 போத்தல் மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளினையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான வீதிபோக்குவரத்து பிரிவு மற்றும் பொலிசார் இணைந்து தம்பிலுவில் பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த நிலையிலே இக் கைது இடம்பெற்றுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(சதாசிவம் நிரோசன்)

Leave A Reply

Your email address will not be published.