அதிவேக நெடுஞ்சாலையில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொழும்பிலிருந்து மாத்தறை செல்லும் வழித்தடத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

களனிகம மற்றும் டொடன்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மோதுண்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளை போலீசார் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.