இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை? 57 பேருக்கு கொரோனா!

இன்று ஒரே சமயத்தில் கொரோனா நோயாளிகள் 57 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதை சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த முகாம் போதை பொருட்கள் பாவிப்போரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் நிலையமாக பாவிக்கப்பட்டு வருகிறது. இங்கு 3 மாதங்கள் இருந்த ஒருவர் வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதே அங்கு கொரோனா தொற்றாளியாக அவர் அடையாளம் காணப்பட்டார். தற்போது கந்தக்காடு முகாமில் தங்கியிருப்போர் மற்றும் சேவையாளர்கள் என 450 பேருக்கு பீசீஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களிலிருந்தே 57 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம் மாறவிலை பகுதியில் உள்ள பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக கடைமையாற்றுகிறார்.

Comments are closed.