மே தினக் கூட்டம், பேரணிகளுக்குத் தடை! – இராணுவத் தளபதி அறிவிப்பு.

இலங்கையில் இம்முறை மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் இரத்துச் செய்ய கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தீர்மானித்துள்ளது என அதன் தலைவரான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக எந்தவொரு மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த வேண்டாம் எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக்கொள்கின்றது.

இந்தத் தீர்மானத்துக்கு இணங்க அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும்.

கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுக்க எவரும் இடம் கொடுக்கக்கூடாது.

மக்கள் அனைவரும் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.