இலங்கையில் இளம் வயதினரை இலக்கு வைக்கும் கொரோனா! சன்ன ஜயசுமன தகவல்.

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் தினசரி கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எனினும், தற்போதைய சூழ்நிலையில், மாறுபாட்டுக்கு உள்ளான கொரோனாத் தொற்று நாட்டுக்குள் பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும், வார இறுதியில் வெளியிடப்படும் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே அதனைக் கூறமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.