ஜே.வி.பியின் மே தினப் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும்! – அநுரகுமார தெரிவிப்பு

திட்டமிட்டபடி இந்த ஆண்டும் மே தினப் பேரணியை நடத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதில் கலந்துகொண்டு பேசிய ஜே.வி.பி.யின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க இந்த முடிவை உறுதிப்படுத்தினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பேரணிகள், ஒன்றுகூடல்கள் எனக் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பற்றி கவனம் செலுத்தாத அரசு, மே தினப் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமைக்குப் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகின்றது.

தனது அரசியல் நோக்கத்துக்காக அரசு மே தினப் பேரணிகளை நிறுத்தி வைக்க முடிவெடுத்தாலும், அந்த முடிவுக்கு ஜே.வி.பி. கட்டுப்படாது.

அந்த அடிப்படையில், மே தினப் பேரணியை நடத்துவதற்கு ஜே.வி.பி. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.