திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கிறது தமிழக கருத்து கணிப்புகள்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் தெரிக்கின்றன. அதே போன்று புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளது.

ரிபப்ளிக் -சி என் எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக 160 முதல் 170 இடங்கள் வரை வெல்லும் என்றும் அதிமுக 58 முதல் 68 இடங்கள் வரை வெல்லும் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சி 2 தொகுதிகளிலும் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 4-6 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 160 – 172 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 58 – 70 இடங்களும், மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும், அ.ம.மு.கவுக்கு 2 இடங்களும், மற்றவர்களுக்கு 0- 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்தியாடுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக 175 முதல் 195 இடங்கள் வரை வெல்லும் என்றும், அதிமுக 38 முதல் 54 இடங்கள் வரை வெல்லும் என்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும் மக்கள் நீதி மய்யமும் 2 தொகுதிகள் வரை வெல்லும் என்கிறது இந்த கணிப்பு.

தந்தி தொலைக்காட்சி அதிமுக 68 இடங்களில் வெல்லும் என்றும் திமுக 133 இடங்களில் வெல்லும் என்றும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம்: மொத்த தொகுதிகள் 234

 

ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என ரிபப்ளிக் டி.வி. சி.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளது.

பி- மார்க் கருத்து கணிப்பு

அ.தி.மு.க., கூட்டணி 58 முதல் 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி வெறும் என பி-மார்க் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

டுடேய்ஸ் சாணக்கியா:

அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை
4 இடங்களிலும் வெற்றி பெறும் என டுடேய்ஸ் சாணக்கியா கணித்துள்ளது.

இந்தியா அஹெட் கருத்து கணிப்பு

தி.மு.க., கூட்டணி 165 முதல் 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 முதல் 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என இந்தியா அஹெ ட் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

சி ஓட்டர்ஸ்

தி.மு.க, கூட்டணி 160 முதல் 172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 முதல் 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் ‘சி’ ஓட்டர்ஸ் கணித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் வாயிலாக தி.மு.க, பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.