வெலிக்கடை கொலை குற்றம் சாட்டப்பட்ட ரங்கஜீவவால் பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தல்

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் குழுவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட போதைப்பொருள் பணியகத்தின் முன்னாள் ஆய்வாளர் நியோமல் ரங்கஜீவ, நீதிமன்றத்திற்குள் ஒரு பத்திரிகையாளரை மிரட்டி போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

தன்னை புகைப்படம் எடுத்ததற்காக ரங்கஜீவ பத்திரிகையாளரை மிரட்டியதாகவும், அவரது கேமராவிலிருந்த சிப் போலீஸ் போஸ்டில் வைத்து அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெலிக்கடை படுகொலை குறித்து அறிக்கை அளித்த பத்திரிகையாளர் கசுன் புசெலவேலாவ என்பவரும் ரங்கஜீவ தன்னை வெருட்டியதாக புகார் அளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ரங்கஜீவவை நீதிமன்றம் எச்சரிக்கை செய்திருந்தது. ஆனாலும் ரங்கஜீவா சட்டத்தை இன்னும் தனது கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

Comments are closed.