முல்லைதீவு உண்ணாப்புலவு பகுதியில், வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்கவந்த மூவர் கைது

முல்லைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில், வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்கவந்த மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் ஒருவர் மீது தூளை அள்ளி வீசி எறிந்ததுடன் அவரை பொல்லுகளாலும் வாள்களாலும் தாக்க முற்பட்டவேளை , வீதியால் சென்ற இளைஞன் ஒருவர் கண்டு ஊர்மக்களை அழைத்துள்ளார். அப்போது இரு சந்தேக நபர்கள் தப்பிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் ஊர்மக்கள் அவர்களை மடக்கி பிடித்ததுடன், சரமாரியாக அவர்களை தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி சாரதியும் பொலிசாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் முல்லைதீவு பொலிசார் இப்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.