ஸ்பானிஷ் சமூக ஊடக நட்சத்திரமான மீம் புன்னகை மன்னன் மறைந்தார்

உலக புகழ்பெற்ற ஸ்பானிஷ் நகைச்சுவை நடிகர் ஜுவான் ஜோயா போர்ஜா கடந்த 28ம் திகதி காலமானார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவர் சிரிக்கும் காட்சியை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். அந்த சிரிப்பை நக்கலுக்காக பலர் மீம் செய்து பயன்படுத்தினர்.

ஜுவான் ஜோயா போர்ஜா இறக்கும் போது அவருக்கு 65 வயது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

போர்ஜா 2014 இல் இருந்து இணையத்தில் பிரபலமடைந்தார்.

ஒரு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது அவர் சிரித்தபடி காணப்பட்ட தொடர் காட்சியை சிலர் குரல் அல்லது வசன வரிகள் சேர்த்தபோதுதான் அது மிகப் பிரபலமானது.

அவரது படம் சமூக ஊடகங்களில் பொதுவானது, வீடியோக்களும் புகைப்படங்களும் வேடிக்கையாகவோ அல்லது நக்கலாகவோ வெளியிடப்பட்டன. அவரது உருவத்துடன் கூடிய ‘மீம்’ இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் காணப்படுகிறது.

அவர் புதன்கிழமை (ஏப்ரல் 28) மருத்துவமனையில் இறந்தார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போர்ஜா கடந்த ஆண்டு சுகாதார காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது கால்களில் ஒன்றை வெட்டிய பின்னர், சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ‘எலக்ட்ரானிக் ஸ்கூட்டரை’ வாங்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஆரம்பித்த தனது ரசிகர்களுக்கு மார்ச் மாதம் நன்றி தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.