கொரணா தொற்றுநோய் பரவலை முறியடிக்கப் போராடுவதில் எமது தாதியர்களின் பங்கு அளவிட முடியாதது!

எமது ஆரோக்கியத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும், தமது ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பணயம் வைத்து – அல்லும் பகலும் அவர்கள் புரியும் அர்ப்பணிப்பு அளப்பரியது!

“அனைத்துலக தாதியர் நாள்” ஆகிய இன்று, எமது நாட்டில் மட்டுமல்லாது – உலகெங்கிலும் அயராது பணியாற்றிக்கொண்டிருக்கும் அனைத்து தாதியர்களையும் எனது மனதில் இருத்தி – அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மரியாதையையும் மனமார்ந்த நன்றிகளையைம் தெரிவித்து வணங்குகின்றேன்.

இந்த மாபெரும் சேவையினை மனுக்குலத்திற்கு வழங்கிநிற்கின்ற அவர்களை, ஆசீர்வதித்துக் காத்தருளுமாறு – எமது நாட்டு மக்கள் அனைவரது சார்பாகவும், இறைவனை நான் இறைஞ்சி வேண்டுகின்றேன்!

Leave A Reply

Your email address will not be published.