கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்றாயன் (வீடியோ)

ரொம்ப Careless-ஆ இருந்தேன் இப்போ கஷ்டப்படுறேன் – கொரோனாவால் பாதிக்கப்ட்ட சென்றாயன்

பிரபல காமெடி நடிகர் சென்ராயனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளார். சமீபத்தில் தான் இவர் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான கேப்ரில்லா கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவருடன் நடனமாடிய ஆஜீத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அதே போல நேற்று பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக காலமானார். இப்படி ஒரு நிலையில், தற்போது கில்லி பட நடிகர் மாறனும் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.