கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிலேயே இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10 ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதன் பின் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர்களை வீட்டிற்கே அழைத்து தடுப்பூசி போட்டுள்ளார் ரஜினிகாந்த். ரஜினி தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோவை அவரது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் தடுப்பூசி போட்டு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எப்போது போட்டார் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று அவர் போட்டுக்கொண்டது கோவி ஷீல்டு இரண்டாவது டோஸ் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.