கொரோனா தொற்றுக் எதிரான போராட்டத்தில் புரிந்துணர்வுடனும் தியாக சிந்தனையுடனும் செயலாற்ற வேண்டும்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எழுந்து நாடளாவிய ரீதியில் நாடு முடக்கப்பட்ட சூழ்நிலையில் புனித இந்நோன்புப் பெருநாளான ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் கொரோனா தொற்றுக் எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சுகாதார வழிமுறைகளைப் பேணி ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் தியாக சிந்தனையுடனும் செயலாற்ற வேண்டும் என்று யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான வசீர் முக்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ரமழான் முஸ்லிம்களிடத்தில் நற்பண்புகளையும் சீரான ஒழுக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாகும். அல்லாஹ்வை திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், வேறு விவகாரங்களில் நாவை ஈடுபத்தாது மௌனம் காத்தல், தேவை ஏற்படும் போது நல்லது மாத்திரம் பேசுதல் பொய் புறம் பேசுவதில் இருந்து நாவைப் பாதுகாத்தல் போன்ற பல நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தரும் ஒரு தலைசிறந்த மாதம் ரமழான் மாதம் ஆகும்.

எனவே இறுதி நோன்பு வரை பிடித்து விட்டு நோன்புப் பெருநாளைக் கொண்டாம் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் தம் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு ஒட்டுமொத்த முழு முஸ்லிம் சமூகமும் உள மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற ஒரு நல்ல நாளாக இப்பெருநாள் அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இன்று நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் புதிய திரிபுபெனவும் இது முன்னைய வைரஸிலும் பார்க்க மாற்றத்தைக் கொண்டதெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆதலால் இன்று நாங்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாமல் வீட்டில் இருந்து பெருநாளைக் கொண்டாடிகின்றோம்.

எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த கொரோனா தொற்று முழுமையாக நமது நாட்டையும் விட்டும் உலகையும் விட்டும் நீங்கிச் செல்ல இத்திருநாளில் இறைவனிடம் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை புரிவோம் எனக் கேட்டுக் கொள்வதோடு தமது உள்ளம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.