கொரோனாவின் தீவிரத்தால் வடக்கில் மேலதிகமாக 300 பி.சி.ஆர். பரிசோதனை!

வடக்கு மாகாணத்தில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 700 பி.சி.ஆர். மாதிரிகள் நாள் ஒன்றுக்கு பெறப்பட்ட நிலையில் அது ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் வடக்கில் பெறப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்று சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் சிறிதரன் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன் பின்னர், முன்னர் மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையை விட 300 மாதிரிகள் நாள் ஒன்றுக்கு மேலதிகமாகப் பெறப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.