யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் வெடித்தது சர்சை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் மீண்டும் சர்ச்சையொன்று கிளப்பப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகளின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெறவுள்ள துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீடு செய்யும் விசேட கூட்டத்தில் மதிப்பீடு செய்யும் பேரவை உறுப்பினர்கள் தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் கலாநிதி கற்கை நெறிக்கு மாணவராகப் பதிவு செய்துள்ள ஒருவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுப் புள்ளியிடலை மேற்கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

பேரவையில் மூதவை சார்பில் அங்கம் வகிக்கும் ஒருவர், பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெறுவதற்காக – உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் மாணவராகப் பதிவு செய்து, கற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை, குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதியும் ஒரு துணைவேந்தர் விண்ணப்பதாரியாக இருப்பதனால் முரண்நகையைத் தோற்றுவிக்கலாம் என்று ஏனைய விண்ணப்பதாரிகளும், பேரவை உறுப்பினர்களும் விசனமடைந்திருக்கின்றனர்.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் எழுத்து மூல தெளிவுபடுத்தல் பெறப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் பேரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பவிருக்கின்றனர்.

Comments are closed.