எதிர்க்கட்சியினரைப் பலப்படுத்தும் எந்தச் சதிக்கும் சு.க. துணைபோகாது அமைச்சர் மஹிந்த அமரவீர திட்டவட்டம்.

எதிர்க்கட்சியினரைப் பலப்படுத்தும் எந்தவொரு அரசியல் தீர்மானங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“தற்போதைய அரசைப் பலவீனமடையச் செய்ய எத்தனிக்கும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும்கூட்டுக்கு அழைக்கின்றனர். எமது கட்சி இதற்கு ஒருபோதும் துணைபோகாது.

இந்த அரசு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான் செயற்படுகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கித்தான் செயற்படுகின்றனர். இவர்களின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசே தற்போது ஆட்சியிலும் உள்ளது.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற வகையில் அரசையே பிரதி நிதித்துவப்படுத்துகின்றோம். இதனால் நாம் ஒருபோதும் இந்த அரசைக் குழப்புவதற்கு அல்லது தற்போதைய அரசை மாற்றிமைப்பதற்கு உடன்படப் போவதில்லை. எதிர்க்கட்சியினரைப் பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்தச் சூழ்ச்சிகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்காது.

எமது கட்சிக்காரர்களுக்கும், எமது கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் பிச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை நாம் அரசுக்குள்ளே பேசித் தீர்ப்போம். ஜனாதிபதியும், பிரதமரும் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எமது அமைப்பாளர்களுக்கு மக்கள் முன் சென்று தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. இவற்றை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் அமைச்சர்களினூடாக முன்னெடுக்க முடியும்.

தற்போது நாம் இவ்வாறான ஒரு சில திட்டங்களைத் தயாரித்துள்ளோம். இவற்றுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத்தருவதாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச வாக்குறுதியளித்துள்ளார்.

இந்த அரசில் உள்ள அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாகவே அரசியலை ஆரம்பித்தனர்.

இதனால் இவர்களது உள்ளங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான கௌரவமும் மதிப்பும் இருக்கவே செய்யும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.