வீட்டிலேயே இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன்பின் வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் கோவிட் 19 காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாக்சிங் பயிற்சி செய்யும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.