சற்றுமுன் கிளிநொச்சியில் கொரோனா தொற்றால் சிறுமி பலி.

கிளிநொச்சியில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்த 15 வயது சிறுமிக்கு கொரோனா – கிளிநொச்சியில் இரண்டாவது கோவிட் மரணம் பதிவு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியம்பொக்கணை நகேந்திரபுரத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்றைய தினம் நஞ்சு அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

தற்கொலை முயற்சி மேற்கொண்ட சிறுமியை உறவினர்கள் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த சிறுமியின் பூதவுடலில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டது.

குறித்த சிறுமி வசிக்கும் பிரதேசத்தில் முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பல குடும்பங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.