அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.

தனது அம்மாவும் அப்பவும் விவாகரத்து செய்தபோது சந்தோஷப்பட்டேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசனும், நடிகை சரிகாவும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கமலும், சரிகாவும் விவாகரத்து செய்து கொண்டனர்.

சரிகா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தன் பெற்றோரின் விவாகரத்து குறித்து செவ்வியொன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அது குறித்து ஸ்ருதி கூறியிருப்பதாவது….

என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை வாழ பிரிந்ததால் சந்தோஷப்பட்டேன். இணக்கம் இல்லாத இரண்டு பேர் சில காரணங்களுக்காக சேர்ந்து இருப்பது முடியாது. அதனால் அவர்கள் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

அவர்கள் எனக்கும், தங்கைக்கும் அருமையான பெற்றோராக இருக்கிறார்கள். நான் என் அம்மாவை விட அப்பாவிடம் நெருக்கம். அம்மா நன்றாக இருக்கிறார். எங்கள் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.