MGR அவர்களது நிழலான ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார்

எம்.ஜி.ஆர்.கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன், வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98.

அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் அவர். திரைப்படத் துறையிலும் சிறந்து விளங்கினார். கதை வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’ உட்பட எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார்.

அதைப் போல ரஜினியின் ‘பணக்காரன்’, ‘ராணுவ வீரன்’ ‘மூன்று முகம்’, ‘ஊர்க்காவலன்’ எனப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். கமலை வைத்தும் ‘காதல் பரிசு’, ‘மூன்றாம் பிறை’ எனப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்திருக்கிறார்.

ஆர்.எம்.வீரப்பன் இன்று காலை காலமானார். அவரது மகன் வெளிநாட்டிலிருந்து வரவேண்டியிருப்பதால், இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்கிறார்கள்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார். அவருக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் உடனும் நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன். திரைத் துறையில் எம்ஜிஆருக்கு வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சத்யா மூவிஸ் நிறுனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

“திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மறைந்த முதல்வர் கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

பின்னாளில், எம்ஜிஆர் கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திமுகவுடனும், மறைந்த முதல்வர் கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

எம்ஜிஆரின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகுக்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்துக்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார்.

அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மிகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன் , அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்!” என்று இரங்கல் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்: “எம்ஜிஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.அண்ணன் ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் ஆர்.எம். வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் செய்தியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ஆர்.எம்.வீ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒரு முழு வாழ்கையை வாழ்ந்து நம்மை விட்டு ஆர்.எம்.வீ சார் பிரிந்து உள்ளார். அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்கை அரசியல், சினிமா வாழ்கைகளில் வலது கையாக ஆர்.எம்.வீ சார் இருந்தார். அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள், மத்திய, மாநில அமைச்சர்களாகி, கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும், புகழும், பணத்தோடு இப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆர்.எம்.வீ அவர்கள் எப்போதும் பணத்தின் பின்னால் போனது இல்லை, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ அவர்கள், எனக்கும், ஆர்.எம்.வீ சார் உடனான நட்பு புனிதமானது, உணர்ச்சிகரமானது, ஆழமானது. என் வாழ்நாளில் நான் அவரை மறக்க முடியாது, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தொடர்புடையவர்களுக்கும் நன்றி ” என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளர்.

 

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?

ஆர்.எம்.வீ என அறியப்படும் ஆர்.எம்.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் பிறந்தவர். இளம் வயது முதலே திராவிட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த வீரப்பன், காரைக்குடி ராமசுப்பையா மூலமாக பெரியாருக்கு அறிமுகம் ஆனார். பின்னர் பெரியார் உடன் ஈரோடு சென்று பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு திராவிட இயக்கத் தலைவர்கள் உடன் தொடர்பு ஏற்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.