மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் (26) புதன்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும்,
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும்,
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும்,
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும்,
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும்,
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேரும், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 32 பேர் உட்பட மொத்தமாக 116 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்திலும் சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.