மாங்குளம் முச்சக்கரவண்டி சங்கத்தின் சாரதிக்கு கொரோனா:சாரதிகள் அனைவரும் தனிமைப்படுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின்மாங்குளம் சந்தியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மாங்குளம் நகர் பகுதியில் முச்சக்கர வண்டி சங்கத்தினை சேர்ந்த சுமார் இருபது வரையானவர்கள் முச்சக்கர வண்டியினை வைத்து தொழில் செய்துவருகின்றார்கள்.

கடந்த 23.05.2021 அன்று முச்சக்கர வண்டி சாரதிகள் பத்து பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நீதிபுரம் பகுதியில் வசித்து வரும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது (25) உறுதிப்படுத்தப்பட்டுளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனை தொடர்ந்து முச்சக்கர வண்டிசங்கத்தின் சாரதிகள் அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.