முதியோருக்காக திறக்கப்படவுள்ள தபாலகங்கள்- அரசாங்க தகவல் திணைக்களம்.

கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடைவர்கள், தபாலகங்கள் மற்றும் உப- தபலகங்களுக்குச் சென்று, தங்களுடைய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளையும் (28) நாளை மறுதினமும் (29) காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை அவை திறந்திருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

தபாலகங்கள் ஊடாக வழங்கப்படும், 2021ஆம் ​ஆண்டு மே மாதத்துக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு, விவசாயி/ மீனவர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு மற்றும் பொதுமக்கள் நிவாரண ​கொடுப்பனவுகளே வழங்கப்படவுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதியுடன் குறித்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தருபவர்கள் தமது ஓய்வூதிய அடையாள அட்டை,விவசாய/மீனவ ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் கொடுப்பனவுகளுக்காக விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளுடன் தபாலகங்களுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில அலுவலகங்கள் திறக்கப்படாத சந்தர்ப்பத்தில் 1950 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Leave A Reply

Your email address will not be published.