நைஜரில் படகு விபத்துக்கள் இடம்பெறுவது பொதுவான நிகழ்வாகியுள்ளது.140 பேர் மாயம்.

நைஜர் ஆற்றில் 160 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படகு மத்திய நைஜர் மாநிலத்தை விட்டு வெளியேறி வடமேற்கு கெப்பி மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அது நீரில் மூழ்கி காணாமல்போனதாக ந்காஸ்கி மாவட்ட நிர்வாகத் தலைவர் அப்துல்லாஹி புஹாரி வாரா தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், 22 பேர் மீட்கப்பட்டதுடன், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 140 பேரை காணவில்லை என்றும் அவர் கூறினார்.

நைஜரில் படகு விபத்துக்கள் இடம்பெறுவது ஒரு பொதுவான நிகழ்வாகியுள்ள நிலையில், இம் மாத தொடக்கத்தில் மத்திய நைஜர் மாநிலத்தில் அதிக சுமை கொண்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.