இந்து பெண்ணின் பிணத்தை அநாதையாக விட்ட குடும்பம்… இறுதிச் சடங்கு செய்து நெகிழ வைத்த முஸ்லிம்

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் இளைஞர்களின் செயல் மாவட்டத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆங்கூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே ஆங்கூர் பாளையத்தில் கொரோனா தொற்றால் பலர் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனால் மக்கள் பலர் கொரோனாவால் உயிரிழந்தது அவரது உறவினராகியிருந்தாலும் உடல்களைப் பெற மறுக்கின்றனர். அப்படிக் குறிப்பிட்ட 55 வயது பெண்ணின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன் வரவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த கம்பம் பகுதி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு சுடுகாட்டிற்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்த பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

இதனால் அந்த பெண்ணிற்கு இந்து முறைப்படி இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர்.

மதம் கடந்து மனிதநேயம் கொண்ட இந்த சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.