மன்னாரில் உப்புக்கு முண்டியடித்த மக்கள்.

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை(3) காலை மக்கள் கறி உப்பினை முண்டியத்து கொள்வனவு செய்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளதாகவும் இதனால் நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்று காலை முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பைக்கற்றுக்களை கொள்வனவு செய்ய மக்கள் முன்டியடித்ததோடு, மக்கள் தமக்கு தேவையான உப்பு பைக்கற்றுக்களையும் கொள்வனவு செய்து சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முண்டியடித்துக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தற்போது அதிக அளவு உப்பு கையிருப்பில் உள்ளதோடு, பெரும் போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம்பெற்று வருவதாக மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.