அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் சசிகலா ! ஓ.பி.எஸ்ஸுடன் கருத்துவேறுபாடு? ஆடியோ வைரலுக்கு பின் பேசிய எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா விடுதலையாகி தமிழகம் திரும்பினார்.

தமிழகம் திரும்பிய இவர், திடீரென்று தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அதன் பின் இவர் இல்லாமல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தோல்வியடைந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், சசிகலா, தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் பேசிய ஓடியோ வைரலானது. அதில், நான் விரைவில் வந்துவிடுவேன், கட்சியைக் காப்பாத்திவிடலாம் என்று சசிகலா பேசியிருந்தார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சசிகலா அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் அது நடக்காது.

அவர் அதிமுக கட்சியில் இல்லை, சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசவில்லை, அமமுக தொண்டர்களுடன் தான் பேசினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் எந்தவித கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை. சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் தான் அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.